நீர்விலக்கி அடுக்கு பூசுவதன் மூலம் நெகிழி முகக்கவசங்களின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்துகின்றனர்.
நீர்விலக்கி அடுக்கு பூசுவதன் மூலம் நெகிழி முகக்கவசங்களின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்துகின்றனர்.
ஒரு நபரின் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் இல்லாதபோது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கும் இது, இந்தியாவின் பெரும் சுகாதார நெருக்கடியாகும். ஊட்டச்சத்து குறைபாடு, புறக்கணிக்கப்பட்டால், குழந்தைகளின் உடல், மனவளர்ச்சிக் குறைபாடு, உடல் எடை குறைபாடு, மற்றும் உயிரிழப்பிற்குக்கூட வழிவகுக்கும்.
ஐம்பத்தி மூன்று வயதுடைய சீலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டது), ஒரு நாள் காலையில் எழுகையில் தனது அடிவயிற்றில் சற்று வலியினை உணர்ந்துள்ளார். தனது மகளின் திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், திருமண வேலைக்கு மத்தியில் அந்த வலியினை உதாசீனப்படுத்தியுள்ளார் சீலா.
Researchers from the Tata Trusts, Institute of Economic Growth, India and Harvard University, USA, have tried to understand how people's socio-economic status affect their food habits and the diversity of the food they eat.
வலி என்பது உடலில் ஏற்படும் வேதனையளிக்கும் உணர்வு. நமது தினசரி அலுவல்களில் வலிகள் தவிர்க்க முடியாதவை. சிறு காயங்கள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் வலிகளானது சில மணித்துளிகள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கக்கூடியவை. சிகிச்சைகளின் காலம் முடிந்தாலும், சில நேரங்களில் வலிகள் நாட்பட்ட வலிகளாக பல ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு. இந்த நாட்பட்ட வலிகள் என்பவை மிகவும் துயர் நிறைந்தவை. உலகெங்கிலும் நாட்பட்ட வலிகளின் சிகிச்சைக்காக வருடத்திற்கு பல கோடி ருபாய்கள் செலவிடப்படுகின்றன., நரம்புகளில் ஏற்படும் சேதங்களால் வரும் தொடர்ச்சியான நரம்பு வலிகள் நாட்பட்ட வலிகளில் ஒன்றாகும்.
ஈரல் அழற்சி (Hepatitis) சி என்பது ஒருவகை தொற்றுநோய். இது ஹெப்பாடிட்டீஸ் சி எனும் ஈரல் அழற்சி நச்சுநுண்மத்தினால் (virus) உண்டாக்கப்படுகின்றது. இந்த நச்சுநுண்மம் ரத்தத்தின் மூலமாக பரவுகின்றது. நரம்பு மருந்திற்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் ரத்த தானத்தின் போது பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றினால் இந்த நச்சுநுண்மம் பரவக்கூடும். இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட பல வருடங்களுக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் தெரியலாம். ஆனால், இந்நோய் நீண்ட கால விளைவுகளை ஒருங்கே கல்லீரல் செயலிழப்பு மூலமாக வெளிப்படுத்தும்.
தற்போது பரவலாக இருக்கும் அலோபதி எனும் நவீன மருத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திருந்து தான் பரவலாகி வந்தது. இதற்கு முன்னர், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளே வழக்கத்தில் இருந்தன. தனியாக பிரிக்கப்பட்ட வேதியல் மூலக்கூறுகளைக் கொண்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ப சிகச்சைகள் செய்வதே அலோபதி மருத்துவ முறை. அலோபதி மருத்துவத்தில் பொதுவாக சொல்லப்படும் குறைபாடுகளில் ஒன்று அதன் பக்கவிளைவுகள். இதனால் இன்று உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றைய வழக்கில் கொண்டு வருவத்திற்கான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீநுண் தொழில்நுட்பம் எனப்படும் “நானோ தொழில்நுட்பம்” இன்று அறிவியலில் மிகப்பெரும் மாற்றத்தினை உண்டாக்கி வருகின்றது. மூலக்கூறு அளவிலும் கூட பருப்பொருட்களை கையாளும் தொழில்நுட்பமே மீநுண் தொழில்நுட்பம். மீநுண் துகள்கள் கரிமம் சார்ந்த மற்றும் சாராதவை என இரு வகைகளில் உள்ளன, இவைகள் மிக நுண்ணிய அளவினைக் கொண்டதாகும். இப்படிப்பட்ட மீநுண் பொருட்களை, அகச்சிவப்பு ஒளியின் (Infrared light) உதவியுடன் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை மீநுண் தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையினை விதைத்துள்ளது.