ஓங்கி உயர்ந்த மலைகளிற்கிடையே, பரந்து விரிந்த புல்வெளிகளால் நிரம்பிய ஒரு வனப்பகுதி! இந்த வர்ணனை, திரைப்படங்களில் வரும் ரம்மியமான ஒரு காதல் பாடலை படமாக்க சிறந்த இடம் போல தோன்றலாம். ஆனால், புல்வெளிகளுடன் கூடிய இதுபோன்ற ரம்மியமான நிலப்பரப்புகள் மலை உச்சிகளில் அமைந்திருப்பதை சங்கப்புலவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆவணப்படுத்தியதோடு தங்களின் இலக்கியங்களில் உவமைகளாகவும் பயன்படுத்தியுள்ளனர்.