கடந்த 2019 பிப்ரவரி மாதம், மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் மாவட்டத்திலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த எட்டு நபர்களை ஓநாய் ஒன்று தாக்கியதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதைப் போல், பக்கத்து கிராமத்தில் குளிர்காய்ந்துக் கொண்டிருந்த மூன்று நபர்களை ஒரு ஓநாய் தாக்கியதையும், அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதையும் உள்ளூர் நாளிதழ் ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் இதுபோன்ற ஓநாய் தாக்குதல் சம்பவங்கள், வயல்களில் வேலை செய்யும் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியன.